துபாயில் வருடந்தோறும் ரமலானில் நடைபெறும் புனித குர் ஆன் விருது நிகழ்ச்சி இவ்வாண்டு ரமலான் முதல் தேதியில் துவங்குவதாக புனித குர் ஆன் விருது கமிட்டி தலைவர் இப்ராஹீம் முஹம்மது பூமில்ஹா அறிவித்துள்ளார்.
துபாயிலிலுள்ள பல்வேறு மையங்களில் சனிக்கிழமை முதல் மார்க்க பிரச்சார நிகழ்ச்சிகள் துவங்கும். இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளிலுள்ள முஸ்லிம் மார்க்க அறிஞர்களை இந்நிகழ்ச்சியில் கெளரவிக்க அழைக்கப்பட்டுள்ளது.
குர் ஆன் மனனப்போட்டியில் போர்சுகல்,ஸ்வீடன் உள்பட 83 நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் கலந்துக்கொள்கிறார்கள்.வருடந்தோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சியின்போது உலகின் சிறந்த ஆளுமைத்தன்மைக்கொண்ட முஸ்லிம் அறிஞர் ஒருவருக்கு 10 லட்சம் ஐக்கிய அரபு அமீரக திர்ஹம் வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்ற உலகில் மாற்றுமதத்தைச் சார்ந்தவர்களின் கேள்விகளுக்கு அறிவுப்பூர்வமான ரீதியில் பதிலளிப்பதில் சிறந்து விளங்கும் இந்தியாவைச்சார்ந்த டாக்டர் ஜாஹிர்நாயக் அவர்கள் வருகிற வியாழன்,வெள்ளி தினங்களில் துபாய் world trande centre ஆடிட்டோரியத்தில் உரை நிகழ்த்துகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக