செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

அமீரகத்தினர் சவூதி அரேபியா செல்லத்தடை!

ஜித்தா: சவூதி அரசாங்கம் அமீரகத்தை சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட்க்கு பதிலாக தங்களின் அடையாள அட்டையை பயன்படுத்தி சவூதிக்கும் அமீரகத்துக்கும் பயணம் செய்வதற்க்கு தடை விதித்துள்ளது.

ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை பிரச்சனை சம்மந்தமான ஒப்பந்தத்தை அமீரகம் சரிவர பின்பற்றாததை தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நிர்வாக இயக்குனர் மேஜர் ஜெனரல் சலிம் பின் முகமது அல் புலாஹித் செய்தியளர்களிடம் தெரிவித்தார்.

அமீரகத்தில் உள்ளவர்களின் அடையாள அட்டைகள் ஆகஸ்டு 21, 1974 ல் எல்லைபிரச்சனை சம்மந்தமான இரு நாட்டு ஒப்பந்தத்திற்கு உட்பட்டதாக இல்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது

மேலும் தூதரகங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தும் அமீரக அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார். தகுந்த ஆவணங்கள் பாஸ்போர்ட் இல்லாமல் அடையாள அட்டைகளுடன் இருக்கும் அமீரகத்தவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin