ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இத் தொகுதியில் 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தள்ளுபடி செய்யப்பட்ட சுயேச்சை வேட்பாளரின் மனு ஏற்கப்பட்டது.
இந்த தொகுதிக்கான இடைத் தேர்தல் இம் மாதம் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெற்றது.
சந்தனக்குமார் - பா.ஜனதா - தாமரை
சுடலையாண்டி - காங்கிரஸ் - கை
தனலட்சுமி - சிபிஐ- கதிர் அரிவாள்
சௌந்திரபாண்டியன் - தேமுதிக - முரசு
அருணாசலம் - சுயேட்சை - மின்விளக்கு
ஆறுமுகராஜ் - சுயேட்சை - வாழைப்பழம்
ராமசுப்பிரமணியன் - சுயேட்சை - கிரிக்கட் மட்டை
நாகூர்மீரான் பீர்முகமது - சுயேட்சை - கேமரா
மருதநாயகம் - சுயேட்சை - மோதிரம்
முருகன் - சுயேட்சை - மின்விசிறி
கிருஷ்ணகாந்த் யாதவ் - சுயேட்சை - அலமாரி
ராஜா - சுயேட்சை - தபால்பெட்டி
மொத்தம் 22 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது பல்வேறு காரணங்களுக்காக 11 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
காங்கிரஸ் வேட்பாளர் எம்.பி. சுடலையாண்டி, பா.ஜ.க. வேட்பாளர் அ. சந்தனகுமார், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஞா. தனலட்சுமி, தே.மு.தி.க. வேட்பாளர் மா. செüந்திரபாண்டியன் உள்ளிட்ட 11 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வேட்புமனுக்களை வாபஸ் பெற ஆகஸ்ட் 1 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சனிக்கிழமை பிற்பகல் 3 மணி வரை எந்த வேட்பாளரும் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை. இதனால், 11 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
மேலும், தள்ளுபடி செய்யப்பட்ட சு. ராஜா என்ற சுயேச்சை வேட்பாளரின் வேட்புமனு சனிக்கிழமை மறுபரிசீலனை செய்யப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
12 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் அலுவலரான துரை. ரவிச்சந்திரன் சனிக்கிழமை மாலை வெளியிட்டார்.
தொடர்ந்து வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படி பா.ஜ.க. வேட்பாளர் அ. சந்தனகுமாருக்கு தாமரை சின்னம், காங்கிரஸ் வேட்பாளர் எம்.பி. சுடலையாண்டிக்கு கை சின்னம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஞான. தனலட்சுமிக்கு கதிர் அரிவாள் சின்னம் ஒதுக்கப்பட்டது. பதிவு செய்யப்பட்ட ஆனால், அங்கீகரிக்கப்படாத கட்சியான தே.மு.தி.க. வுக்கு அவர்கள் கோரிய "முரசு' சின்னம் ஒதுக்கப்பட்டது.
மற்ற சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் வருமாறு:
சி. அருணாச்சலத்திற்கு மின்கல விளக்கு (டார்ச் லைட்), எஸ். ஆறுமுகராஜிற்கு வாழைப்பழம், எம். ராமசுப்பிரமணியனுக்கு கிரிக்கெட் மட்டை, யு. நாகூர் மீரான் பீர்முகமதுக்கு காமிரா, சி. மருதநாயகத்திற்கு மோதிரம், எஸ். முருகனுக்கு கூரை மின்விசிறி (சீலிங் பேன்), எஸ். யாதவுக்கு அலமாரி, எஸ். ராஜாவுக்கு தபால் பெட்டி ஆகிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
சின்னங்களை ஒதுக்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவன், ஆட்சியர் அலுவலக மேலாளர்கள் செல்லப்பா, முருகானந்தம், தேர்தல் வட்டாட்சியர் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக