திங்கள், 6 ஜூலை, 2009

மக்களவையில் பட்ஜெட் தாக்கல்


நாடாளுமன்ற மக்களவையில் 2009-10 ம் நிதியாண்டு்க்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார்.



பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்.



வேளாண் துறையில் 4% சதவீத வளர்ச்சியை எட்ட உறுதி.

2014-ம் ஆண்டுக்குள் நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்க நடவடிக்கை.

அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு முக்கியத்துவம்.

ஆண்டுக்கு 1.2 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டம்.

ஆரம்பர சுகாதாரத்துறை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

9% வளர்ச்சியை எட்டுவதற்குத் தீவிர முயற்சி.

அன்னிய மூலதன வரவுகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

சமூக நலத் திட்டங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு.

பெட்ரோலியப் பொருள்களின் விலையை நிர்ணயம் செய்ய நிபுணர் குழு அமைக்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்.

விவசாயிகளுக்கு 7% வட்டியில் ரூ.3 லட்சம் வரை கடன். உரிய நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவோருக்கு சலுகை வட்டியில் கடன்.

அரசு, தனியார் ஒத்துழைப்புடன் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அமைக்கத் திட்டம்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு 144% அதிகரிப்பு.

ஜவாஹர்லால் நேரு நகர புனரமைப்புத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு 80 % அதிகரிப்பு.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.

ஏழைக் குடும்பங்களுக்கு ரூ. 3 விலையில் 25 கிலோ அரிசி அல்லது கோதுமை.

பாரத் நிர்மாண் திட்ட ஒதுக்கீடு 45% அதிகரிப்பு.

ஆறுகள் மற்றும் ஏரிகள் பாதுகாப்புக்காக ரூ.562 கோடி ஒதுக்கீடு.

காவல்துறையை நவீனப்படுத்து ரூ.430 கோடி.

எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்து ரூ.2284 கோடி.

வருமான வரி உச்ச வரம்பு ரூ.1,60,000 ஆக உயர்வு. மூத்த குடிமக்களுக்கு ரூ.2,40,000-ஆகவும், பெண்களுக்கு ரூ.1,80,000 ஆகவும் உயர்வு.

நிறுவன வரியில் மாற்றமில்லை.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.3172 கோடியாக அதிகரிப்பு.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் ஏற்படுத்த முடிவு.

எல்சிடி மானிட்டர்கள் மீதான இறக்குமதி வரி பாதியாகக் குறைப்பு.

செட்-டாப் பாக்ஸ் மீது 5% இறக்குமதி வரி.

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin