
ஸ்ரீவையில் நேற்று சட்ட மன்ற உறுப்பினரின் மறைவையொட்டி ஸ்ரீவைகுண்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அனைத்து வியாபாரிகளும் இறங்கல் கூட்டம் நடத்தி, 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் உடல் சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் காங்கிரஸ் பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
முதல் அமைச்சர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேற்று செல்வராஜ் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் உடல் அடக்கம் இன்று சென்னையில் நடக்கிறது. காலை 9 மணிக்கு நுங்கம்பாக்கம் அற்புத சியோன் ஆலயத்தில் அடக்க ஆராதனை நடக்கிறது. பின்னர் அவரது உடல் பூந்தமல்லி அருகே உள்ள குயின்ஸ்லேண்டு வளாகத்தில் 10 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த நமது ஊர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் அவர்களின் குடும்பத்திக்கு ஸ்ரீவை மக்கள் இணைதளம் சார்பில் மிகுந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக