புதன், 1 ஜூலை, 2009

மாம்பழம்-ஆப்பிள் வாங்குவோரே.. எச்சரிக்கை!


மாம்பழத்தை விரைவாக பழுக்க வைப்பதற்காக கார்பைட் கல் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பதிலளித்த வீரபாண்டி ஆறுமுகம்,

தமிழ்நாட்டில் மொத்தம் 1 லட்சத்து 28 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் 7 லட்சத்து 2 ஆயிரம் டன் மாம்பழம் உற்பத்தியாகிறது. தமிழ்நாட்டில்தான் ஒரு ஹெக்டேருக்கு 5,480 கிலோ மாம்பழம் கிடைக்கிறது.

மாம்பழம் அதிகமாக விளையும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாம்பழ கூழ் தயாரிக்கும் தனியார் ஆலைகள் உள்ளன. கிருஷ்ணகிரியில் மாம்பழத்தை பதப்படுத்தும் குளிர் சாதன கிடங்கு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாம்பழத்தை விரைவாக பழுக்க வைப்பதற்காக கார்பைட் கல்லை பயன்படுத்துகிறார்கள். இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படும். எனவே இவ்வாறு பழுக்க வைப்பவர்கள் மீது சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது தவிர வேளாண், தோட்டத்துறை மூலமும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

ஆப்பிள்களி்ல் மெழுகு பூச்சு:

அதே போல வெளிநாட்டு ஆப்பிள் என்று கூறி அதன் மீது மெழுகைப் பூசி செயற்கையாக சிவப்பு நிற்த்தை ஏற்படுத்தியும், பளபளப்பை ஏற்படுத்தியும் ஏமாற்றி வருகின்றனர்.

மேலும் ஆப்பிள்கள் மீது ஒரு சிறிய ஸ்டிக்கரையும் ஒட்டி அது ஆஸ்திரேலியா ஆப்பிள், அமெரிக்க ஆப்பிள் என்கிறார்கள்.

இந்த மெழுகு மற்றும் சாயத்தால் பல உடல் உபாதைகள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் கலர், பளபளப்பைப் பார்க்காமல், ஸ்டிக்கரைப் பார்த்து ஏமாறாமல் இருப்பது நல்லது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin