புதன், 1 ஜூலை, 2009

எம்பிபிஎஸ்-ரேங்க் பட்டியலில் அதிக அளவில் பிற்பட்ட மாணவர்கள்

எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியலில் பொதுப் பிரிவில் சேர முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த 50 மாணவர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 1,483 எம்பிபிஎஸ் இடங்களில் பொதுப் பிரிவினருக்கு 460 இடங்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 393 இடங்களும் உள்ளன.

இந்த ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் பொதுப் பிரிவு மாணவர்கள் சேருவதற்கான கட்-ஆப் மதிப்பெண் 197.75 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்-ஆப் 196.25 ஆக இருக்கும் என்று தெரிகிறது.

இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பல் மருத்துவம் ஆகியவற்றில் சேர மொத்தம் 14,321 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில் 8,873 பேர் மாணவிகள், 5,064 பேர் மாணவர்கள்.

நிராகரிக்கப்பட்ட 384 விண்ணப்பங்கள் போக, 13,937 விண்ணப்பங்களின் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

வகுப்பு வாரியாக கட்-ஆப் விவரம்:

பொதுப் பிரிவு- 197.75 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்- 196.25
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்)- 196.25

எம்பிசி எனப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கட்-ஆப் மதிப்பெண் 192.5 ஆக இருக்கும் என்று தெரிகிறது.

கவுன்சலிங்கில் பெருமளவில் மாணவர்கள் கலந்து கொள்ளாவிட்டால் இந்த கட்-ஆப் மதிப்பெண்கள் சிறிய அளவுக்குக் குறையலாம்.

குறைந்த முற்பட்ட மாணவர்கள்:

நேற்று வெளியிடப்பட்ட எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியலில் பொதுப் பிரிவில் முதலில் இடம் பெறும் 460 இடங்களில், முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த 50 மாணவர்கள் (10.87 சதவீதம்) மட்டுமே இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இவர்களது எண்ணிக்கை 54 ஆக இருந்தது.

அதிகரி்த்த பிற்பட்ட மாணவர்கள்:

அதே நேரத்தில் இந்த ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அளவுக்கு ரேங்க் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

நர்சிங் இடங்கள் அதிகரிப்பு

இதற்கிடையே தமிழகத்தில் எம்.எஸ்சி. நர்சிங் படிப்புக்கு இந்த ஆண்டு கூடுதலாக 25 இடங்கள் கிடைத்துள்ளன. அதே போல பார்மசி படிப்பிலும் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin