புதன், 1 ஜூலை, 2009

குற்றால சீசன் களைகட்டியது : ஆர்ப்பரிக்கிறது அருவிகளில் தண்ணீர்


குற்றாலத்தில் சாரல் மழை துவங்கியுள்ளதால் குற்றால சீசன் மீண்டும் களைகட்டத் துவங்கியுள்ளது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து வீழ்வதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.

குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான செங்கோட்டை, தென்காசி ஆகிய பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்திலும் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றுடன் குளுமையான சீசன் நிலவி வருகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுவதால் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குற்றால சீசனை அனுபவித்து வருகின்றனர்.

இன்னும் சில தினங்களில் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வியாபாரிகள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், மசாஜ் செய்யும் நபர்கள் சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அலெக்ஸ், தென்காசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin