சனி, 6 ஜூன், 2009

சென்னையில் மாபெரும் கல்வி வழிகாட்டும் கண்காட்சி

சென்னையில் வரும் 7ம்தேதி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை மெளண்ட் ரோடு, மதரஸாயே ஆஜம் மேல் நிலைப் பள்ளியில் உயர் கல்வி நிறுவனங்களில் பயில்வதற்க்கான நுழைவு தேர்வுகள் குறித்த விளக்கக் கண்காட்சி நடக்கிறது.

எல்ஐசி பில்டிங் எதிரே ஸ்பென்சர் ப்ளாசா அருகே உள்ள இந்தப் பள்ளியில் ஐஐடி, ஐஐஎம், ஐஐஎஸ்சி, என்ஐடி, அண்ணா பல்கலைக்கழகம், வெளிநாட்டு படிப்புகள், தொலைதூரக் கல்வி, தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி, மத்திய-மாநில அரசுத் தேர்வுகள்,ஐஏஎஸ், ஐபிஎஸ், யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள், ஆர்ஆர்பி தேர்வுகள்,

காவல் துறை, ராணுவத்தில் சேர்வதற்க்கான வழிமுறைகள், பத்திரிக்கைத் துறையில் உள்ள படிப்புகள் ஆகியவை குறித்து விளக்கங்கள் தரப்படவுள்ளன.மேலும் பிஇ, எம்பிபிஎல், எம்இ, எம்டெக், சட்டம் , பொருளாதாரம், டிப்ளமோ, ஹோட்டல் மேனேஜ்மெண்ட், எம்பில், பிஎச்டி, பார்மஸி உள்ளிட்ட படிப்புகளில் சேருவது, எங்கு படிப்பது, வேலைவாய்ப்புகள் ஆகியவை பற்றியும் விளக்கம் தரப்படவுள்ளது.

தமிழகத்தின் தலை சிறந்த கல்வி யாளர்கள் பங்கு பெறும் இந் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள்,பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவர் அணி தெரிவி்த்துள்ளது.

மேல் விவரங்ளுக்கு:

Cell : 9884235802,9940205959
e-mail : tntjedu@gmail.com
visit : www.tntj.nethttp:/
/tntjsw.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin