காயல்பட்டினத்திற்கு பிரசாரத்திற்கு வந்த கனிமொழி எம்.பி.க்கு பேருந்துநிலையத்தில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் தைக்கா தெருவில் உள்ள மகான் சாகிபு தைக்கா அப்பா அடக்கஸ்தலத்திற்கு சென்று தரிசித்தார்.
அங்கு காயல்பட்டினம் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை மகளிர் அமைப்பான மஜ்லிஜ் நிஸ்வான் மகளிர் மன்ற நிர்வாகிகளை கனிமொழிக்கு மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை செயலர் பாளையம் இப்ராஹிம் அறிமுகம் செய்துவைத்தார்.
மகளிர் அமைப்பின் தலைவர் ஹாஜியா ரஹ்மத் நிஷா கனிமொழியை பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
ஹஜ் பயணம் செல்ல விரும்பி விண்ணப்பிப்பவர்களுக்கு வாய்ப்பு கிட்டுவதில்லை. அனைவருக்கும் ஹஜ் பயணம் செல்ல வாய்ப்பளிக்க வேண்டும் என பெண்கள் கேட்டுக்கொண்டனர்.
அதற்கு கனிமொழி ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.
பின்னர் அவர் காட்டுத் தைக்காத் தெரு, குத்துக்கல் தெரு, சதுக்கை தெரு, ஆறம்பள்ளி தெரு, பிரதான சாலை, கே.டி.எம் தெரு ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக