திருநெல்வேலியில் திங்கள்கிழமை (மே 11) காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.எஸ். ராமசுப்புவை ஆதரித்து நடிகர் கே. பாக்கியராஜ் பிரசாரம் செய்கிறார்.
நடிகர் கே. பாக்கியராஜ் திங்கள்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு தனது பிரசாரத்தை கே.டி.சி. நகரில் இருந்து தொடங்குகிறார்.
பின்னர் அவர் வி.எம். சத்திரம், அண்ணாநகர், பாளையங்கோட்டை பஸ் ஸ்டாண்டு, பெருமாள்புரம், என்.ஜி.ஓ. காலனி, மேலப்பாளையம் சந்தை முக்கு ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
பின்னர் பாக்கியராஜ், மேலப்பாளையம் வி.எஸ்.டி. பஜார், டி.எம்.சி. காலனி, பேட்டை, பழையப்பேட்டை, நகரம் வாகையடிமுனை, தச்சநல்லூர், உடையார்பட்டி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்து சந்திப்பு பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை அருகே மாலையில் பிரசாரத்தை முடிக்கிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக