சவுதி அரேபியா ரியாத் நகரில் கடந்த 26 ஆண்டுகாலமாக செயல்பட்டு வரும் இந்திய பன்னாட்டுப் பள்ளியில் முதல் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியைச் சேர்ந்தவரான அஹமது இம்தியாஸை இந்தப் பணியில் இந்தியத் தூதர் பாரூக் நியமித்துள்ளார்.
இம்தியாஸ் அண்ணா பல்கலைகழகத்தில் பொருளாதாரப் படிப்பை முடித்துவிட்டு மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர். 1985 முதல் சவுதி அரேபியாவில் பல்வேறு முன்னனி நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் இவர் பல்வேறு பொதுநல அமைப்புகளில் நிர்வாகியாகவும் உள்ளார்.
ரியாத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான இவர் அதன் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக