தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் பிரகாஷ், இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் உயர் பதட்டமான 8 வாக்குச் சாவடிகள் உள்பட 114 ஓட்டு சாவடிகள் பதட்டமானவை என்று கணக்கிடப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு காவல் ரோந்து படையினர் குறைந்தது 10 முறை வந்து சோதனையிடுவார்கள்.
வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் இல்லாத பூத்துக்களில் வாக்குப்பதிவு வீடியோ படமாக எடுக்கப்பட்டு அவர்களது சந்தேகம் தீர்க்கப்படும்.
இது தவிர மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் சென்று பாதுகாப்பு பணிகளை பார்வையிடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக