ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் சிந்தியா பாண்டியனை ஆதரித்து அவரது கணவரும், பேரவை முன்னாள் தலைவருமான பி.எச். பாண்டியன் பிரசாரம் செய்தார்.
ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்தில் உள்ள வெள்ளூர், ஆழ்வார்தோப்பு, வரதராஜபுரம், சிவராமமங்கலம், மங்களகுறிச்சி, பெருங்குளம், தோழப்பன்பண்ணை, மாங்கொட்டாபுரம், சிவகளை, பேரூர், பராக்கிரமபாண்டி, திருப்புளியங்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபமங்கலம், ஸ்ரீமூலக்கரை, பண்டாரவிளை, சாயர்புரம், கோவங்காடு, பழையகாயல், மஞ்சள்நீர்காயல், இடையர்காடு உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார்.
அவருடன் வேட்பாளர் சிந்தியாபாண்டியன், ஒன்றியச் செயலர் ஆறுமுகநயினார், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எஸ். திருப்பாற்கடல், பொன்னுதுரை, முத்தையா உள்ளிட்டோர் சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக