
அமெரிக்காவைச் சேர்ந்த 'ரெபுடேஷன் இன்ஸ்டியூட்' உலகின் நம்பகமிக்க நிறுவனங்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள முதல் 50 நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவின் டாடா நிறுவனம், ஸ்டேட் வங்கி, இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, மாருதி சுசுகி ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் இத்தாலியைச் சேர்ந்த சாக்லேட் தயாரிப்பு நிறுவனம் பெரரோ முதலிடத்தைப் பிடித்துள்ளது.
டாடா நிறுவனம் 11வது இடத்தைப் பிடித்துள்ளது. ஸ்டேட் வங்கி-29, இன்ஃபோசிஸ்-39, லார்சன் அண்ட் டூப்ரோ-47, மாருதி சுசுகி-49 ஆகிய இடங்களைப் பிடித்துள்ளன.
மேலும், உலகின் 600 மிகப்பெரிய நம்பகமிக்க நிறுவனங்களின் பட்டியலில் மேலும் 22 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்திய தொழில்துறை மிகச் சிறந்த நிறுவனங்களை கொண்டுள்ளது என்று 'ரெபுடேஷன் இன்ஸ்டியூட்' தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக