ஞாயிறு, 10 மே, 2009

அமெரிக்காவில் 2 ஆயிரம் பேருக்கு பன்றி காய்ச்சல்


மெக்சிகோ, அமெரிக்காவில்தான் முதலில் பன்றி காய்ச்சல் பரவியது. இதில் மெக்சிகோவில் நோய் தாக்குதல் குறைந்து உள்ளது.

ஆனால் அமெரிக்காவில் பன்றி காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. ஏற்கனவே 250-க்கும் மேற்பட்டோருக்கும் பன்றி காய்ச்சல் பரவி இருந்தது.

இப்போது மேலும் 2 ஆயிரம் பேருக்கு பன்றி காய்ச்சல் பரவி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 3 ஆயிரம் பேர் வரை பாதிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. இதனால் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

பன்றி காய்ச்சல் இதுவரை 29 நாடுகளில் பரவியுள்ளது. மொத்தம் 4150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மெக்சிக்கோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் மட்டுமே உயிரிழப்பு ஏற்பட்டு இருந் தது. இப்போது கனடாவிலும் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் நோய் வேகமாக பரவி வருகிறது.

பன்றி காய்ச்சலுக்கு மெக்சிகோவில் இதுவரை 48 பேர் பலியாகி இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin