சீனாவில் இருந்து தரமில்லாத பொருட்கள் இந்தியாவுக்கு வருவதற்கு காரணம், சீனாவில் சரியான விதி முறைகள் இல்லாததே என்று சீன துணை தூதர் மாவ் சூவீ தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
இந்தியாவைச் சேர்ந்த சிறிய வர்த்தகர்கள் அடிக்கடி சீனாவுக்கு செல்கின்றனர்.இவர்கள் சீனாவில் கிராமப்புறங்களில் உள்ள சிறு தொழிற்சாலையில் மலிவான விலைக்கு பொருட்களை வாங்குகின்றனர். இவற்றின் தரம் குறைவாக இருக்கிறது. சீனாவைச் சேர்ந்தவர்கள் கூட, இந்த மாதிரியான தரம் குறைந்த பொருட்களை வாங்குவதில்லை
அதே நேரத்தில் சீன பொருட்கள் பல நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன.இவைகளுக்கு நல்ல பெயரும் உள்ளது.
ஆனால் சீனா எந்த நாட்டிலும் பொருட்களை மலிவான விலைக்கு கொண்டு சென்று குவிப்பதில்லை
கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றுமதியின் பங்கு 40 விழுக்காடாக உள்ளது.சென்ற வருடம் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பிறகு, அக்டோபரில் இருந்து ஏற்றுமதி குறைந்துள்ளது.இதனால் பொருளாதார வளர்ச்சி 6.8 விழுக்காடாக சரிந்து விட்டது.
இதில் இருந்தே சீனா எந்த நாட்டிலும் பொருட்களை கொண்டு சென்று குவிக்கவில்லை என்று தெரிந்து கொள்ளலாம் என்று மாவ் சூவீ கூறினார்
இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் அளவு சீனாவிடம் தேவையான அளவு பெட்ரோலிய கச்சா எண்ணெய், எரிவாயு இல்லை. நாங்களே மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றோம்
சீனாவின் பொருளாதாரம் 2009 ம் ஆண்டின் மத்தியக் காலக்கட்டம் வரை வரை பாதிக்கப்படும்.2010 ம் ஆண்டில் நெருக்கடி தீர்ந்து வளர்ச்சி அடையும் என்று உலக வங்கி கூறியுள்ளதாக மாவ் சூவீ மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக