அடுத்த மக்களவையிலும் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை வலு கிடைக்காது என்பது உறுதிபடத் தெரிந்துவிட்டது. "ஸ்டார் நியூஸ்-நீல்சன்' நடத்திய கருத்துக் கணிப்பின் 2-வது சர்வே இதைத் தெரிவிக்கிறது.
இதன்படி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 203 இடங்களும், பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 191 இடங்களும் கிடைக்கும். இடதுசாரிகள் தலைமையிலான மூன்றாவது அணிக்கு 104 இடங்களும் லாலு பிரசாத், முலாயம் சிங், ராம்விலாஸ் பாஸ்வான் அமைத்துள்ள நாலாவது அணிக்கு 39 இடங்களும் கிடைக்கும்.
மார்ச் 26 முதல் ஏப்ரல் 3 வரையில் நாட்டின் எல்லா பகுதிகளிலும் 50,400 வாக்காளர்களைச் சந்தித்து கருத்து கேட்டதன் பிறகு இந்த முடிவுகள் கிடைத்துள்ளன. இதே அமைப்புகள் நடத்திய இதே போன்ற முதல் கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கூட்டணிக்கு 257 இடங்களும், பாஜக கூட்டணிக்கு 184 இடங்களும், மூன்றாவது அணிக்கு 96 இடங்களும், மற்றவர்களுக்கு 6 இடங்களும் கிடைக்கும் என்று தெரியவந்தது.
இப்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தோழமைக் கட்சிகளுக்குத்தான் இடங்கள் குறைந்துள்ளன.
காங்கிரஸ் அணி: இரண்டாவது சர்வே படி காங்கிரஸ் 155, திமுக 15, திரிணமூல் காங்கிரஸ் 13, தேசியவாத காங்கிரஸ் 11, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசிய மாநாடு, எம்.யு.எல். ஆகிய கட்சிகளுக்கு தலா 2 இடங்களும், மஜ்லிஸ், கேரள காங்கிரஸ், இந்திய குடியரசுக் கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 இடமும் கிடைக்கும் என்று தெரிகிறது.
பாரதிய ஜனதா அணி: பாரதிய ஜனதா 147, ஐக்கிய ஜனதா தளம் 22, சிவசேனை 9, அகாலி தளம் 5, அசாம் கண பரிஷத் 4, ஆர்.எல்.டி. 3, ஐ.என்.எல்.டி. 1.
மூன்றாவது அணி: பி.எஸ்.பி. 26, மார்க்சிஸ்ட் 25, தெலுங்கு தேசம் 13, பிஜு ஜனதா தளம் 9, அஇஅதிமுக 9, மற்ற கட்சிகளுக்கு 23.
நாலாவது அணி: நாலாவது அணியில் சமாஜவாதி 28, ஆர்.ஜே.டி. 6, எல்.ஜே.எஸ்.பி. 4, பிரஜா ராஜ்யம் 1.
திமுகவுக்கு குறையும்: முதல் சர்வேயைவிட இரண்டாவது சர்வேயில் இடங்கள் குறையும் கட்சிகளில் திமுக, சமாஜவாதி, ஆர்.ஜே.டி., எல்.ஜே.பி., சிவசேனை, ஆர்.எல்.டி., ஏ.ஜி.பி., ஜே.டி.எஸ். ஆகியவை வருகின்றன.
முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சிக்கு 30 இடங்கள் 28 இடங்களாகவும், ஆர்ஜேடிக்கு 11 இடங்கள் 6 இடங்களாகவும் குறைகின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக