பார்தி ஏர்டெல்லுடன் ஒப்பந்தம் போட்டு கிட்டத்தட்ட 30 மாதங்கள் கழித்து தனது கூட்டு வர்த்தகத்தை இந்தியாவில் கடைப்பரப்ப வருகிறது உலகின் முதல் நிலை சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட்.
'பார்தி வால்மார்ட்' என்ற புதிய நிறுவனத்தின் கீழ் இந்திய முழுக்க 'கேஷ் அண்ட் கேர்ரி' எனும் பெயரில் புதிய சில்லறை விற்பனை நிலையங்களைத் திறக்க உள்ளன. முதல் கிளை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் இன்னும் சில தினங்களில் துவங்குகிறது.
பார்தி நிறுவனத்தின் துணைத் தலைவர் ரஞ்சன் பார்தி மித்தல் இந்தத் தகவலை எப்ஐசிசிஐ கூட்டத்தில் அறிவித்தார்.
இந்த கேஷ் அண்ட் கேர்ரி கடைகள் ஆரம்பத்தில் சில காலத்துக்கு வட இந்திய நகரங்களில் மட்டுமே திறக்கப்படும். அஹ்கு முழுமையாகக் காலூன்றிய பிறகே தெற்குப் பக்கம் வருவார்களாம்.
ஏற்கெனவே இந்த கடைகள் தங்களுக்கான வாடிக்கையாளர்களைப் பதிவு செய்யும் பணியில் இறங்கிவிட்டன. இப்போதாக்கு இவர்களின இலக்கு பொதுமக்கள் அல்ல. பெரிய நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், சிறு வியாபாரிகள், சமையல்காரர்கள்... இவர்களை தங்கள் வாடிக்கயாளராக மாற்றிக் கொண்டு அவர்களுக்கு மொத்தமாக பொருட்களை விற்பதுதான் திட்டம். வீடுகளுக்கும் கூட இந்த மாதிரி மொத்த டெலிவரி செய்வார்களாம்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் ஈஸிடே எனும் பெயரில் சில்லறை விற்பனை நிலையங்களை பார்தி நிறுவனம் நடத்தி வருவதால், வாடிக்கையாளர்களைப் பிடிப்பது சுலபமாகவே உள்ளதாம். இந்த ஈஸிடே ஷோரூம்களுக்கு டெக்னிக்கல் உதவிகள் உள்பட பலவற்றை வால்மார்ட் வழங்கவிருக்கிறது. இது தவிர கேஷ் அண்ட் கேர்ரியும் தனியாக நடக்கும்.
சில காலத்துக்குப் பின் ஈஸிடே கடைகளில் வால்மார்ட்டும் ஈடுபடக்கூடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக