இந்தியப் பொருளாதாரத்தின் அடுத்த ஆண்டு வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் என்றும், இன்னும் இருபது ஆண்டுகளில் இந்தியாதான் தனிப்பெரும் பொருளாதார சக்தி என்றும் கோல்ட்மேன் சாஷ் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த ஆண்டு 5.2 சதவிகித வளர்ச்சியே அடையும் என்றும் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு வரை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதமாக இருந்தது. ஆனால் சர்வதேச பொருளாதார நெருக்கடி இந்தியப் பொருளாதாரத்தையும் பாதித்துவிட்டது. இப்போது இறுதியில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5.2 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்கிறது கோல்ட்மேன் சாஷ். ஆனால் அடுத்த ஆண்டு நல்ல வளர்ச்சி இருக்கும். 7.8 சதவிகித வளர்ச்சியை எதிர்பார்க்கலாம் என்றும் அந்த வங்கியின் பொருளாதார ஆராய்ச்சிப் பிரிவு தெரிவித்துள்ளது,
சமீபத்தில் சிகாகோவில் நடந்த பொருளாதார மாநாட்டில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார் அவ் வங்கியின் பொருளாதாரப் பிரிவு தலைவர் ஓ நீல்.
இப்போதைக்கு இந்தியா செய்ய வேண்டியது, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடனான வர்த்தக தடைகளை விலக்கிக் கொள்வதுதான். ஆனால் இருபது ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம்தான் தனிப்பெரும் சக்தியாகத் திகழப் போகிறது.
இந்தியப் பொருளாதாரம் வளர்ந்த கதையைத்தான் பேசி வியக்கப் போகிறது உலகம். ஆண்டுக்கு 6 சதவிகித வளர்ச்சி என்ற அளவிலேயே வளர்ந்தால் கூட, அடுத்த 40 ஆண்டுகளில் அமெரிக்காவை மிஞ்சும் அளவு இந்தியா வளரும் என்கிறார் ஓ நீல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக