ஏரல் நகரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். அதே பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர்கள் இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று இவர்கள் இருவரும் எதிர்எதிரே சந்தித்தனர்.
அப்போது அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் முருகனை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டார்.
இதையடுத்து முருகன் அவரது நண்பர்கள் லெனின், ஜெகன், பொன்சீலன், சமுத்திரபாண்டி, ஜெயசிங், கருப்பசாமி, ஞானசுந்தர் ஆகிய 8 பேருடன் சென்று பாலகிருஷ்ணன், அவரது நண்பர் சக்திவேல் மற்றும் ஒருவரை அரிவாளால் வெட்டினார். இதில் 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது. பாலகிருஷ்ணனின் காலில் வெட்டு விழுந்தது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் முருகன் மற்றும் அவரது நண்பர்களை வலைவீசி தேடிவந்தனர். அவர்களை பிடிப்பதற்காக அவர்களுடைய வீட்டில் போலீசாரும் நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இன்று காலை முருகனின் நண்பரான லெனின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த அவருடைய கார் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. வீடும் சூறையாடப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பும் அப்பகுதியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
லெனினின் கார் மற்றும் அவரது வீட்டை சூறையாடியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக