காந்தியடிகளின் சுதேசி இயக்கத்தால் தற்போது ஈர்க்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்கள், இஸ்ரேலியத் தயாரிப்புப் பொருள்களை வாங்குவதில்லை என தீர்மானித்துள்ளனர்.
இது சம்பந்தமாக, பாலஸ்தீன வடமேற்கு மாகாணத்திலுள்ள 50 கிராமங்களைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட அமைப்பினர், இஸ்ரேலிய தயாரிப்புளுக்கு எதிரான பிரசார இயக்கத்தைத் துவங்கியுள்ளனர்.
இது சம்பந்தமாக, பாலஸ்தீனத்தின் மான் செய்தி ஏஜன்ஸிக்கு, நாப்லஸில் உள்ள மக்கள் கமிட்டி தலைவர் காலித் மன்சூர் தெரிவித்ததாவது:
இந்த திடீர் மாற்றம் மெதுவாகத் தான் ஏற்படும் என்று எங்களுக்குத் தெரியும். இருப்பினும், இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பு ஆங்கிலேயர்களை எதிர்த்து காந்தியடிகள் என்ன செய்தாரோ, அதையே நாங்கள் செய்ய முடிவு செய்துவிட்டோம்.
ஒவ்வொரு ஆண்டும், 0.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இஸ்ரேலிய தயாரிப்புகளை பாலஸ்தீனர்கள் நுகர்கின்றனர். இதில், 28 சதவீத அளவுக்கு இஸ்ரேலிடமிருந்து சிமென்ட் பெறப்படுகிறது.
மேலும், 2.40 மில்லியன் மதிப்புள்ள அமெரிக்க டாலருக்கு மருந்துகளும், 10 மில்லியன் மதிப்புள்ள அமெரிக்க டாலருக்கு தங்கமும் வாங்கப்படுகிறது என, அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக