சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் "சா' விமானம் இந்தியாவில் மூன்று புதிய நகரங்களுக்கு இந்த வாரம் முதல் விமான சேவையை துவங்குகிறது.
பெங்களூர், கோழிக்கோடு, லக்னோ ஆகிய நகரங்களுடன் விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
லக்னெüவுக்கு வாரத்தில் மூன்று விமானங்களை மார்ச் 28-ம் தேதியிலிருந்தும், பெங்களூருக்கு வாரத்தில் இரண்டு விமானங்களை மார்ச் 30-ம் தேதியிலிருந்தும், கோழிக்கோடுக்கு வாரத்துக்கு நான்கு விமானங்களை மார்ச் 31-ம் தேதியிலிருந்தும் இயக்க உள்ளது. இத்தகவலை சவூதி அரேபியன் ஏர்லைன்ஸின் மக்கள் தொடர்புத் துறை துணைத் தலைவர் அப்துல்லா பின் முஷாபாப் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக