சனி, 21 மார்ச், 2009

துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் மாதாந்திர கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு








துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் மாதாந்திர கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு 20.03.2009 வெள்ளிக்கிழமை காலை கராமா சிவ் ஸ்டார் பவன் உணவகத்தில் நடைபெற்றது.
வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவர் காவிரிமைந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் சந்திரசேகர் வரவேற்றார். ஜியாவுதீன் முன்னிலை வகித்தார்.
இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழக தலைவர் நீடூர் முனைவர் அய்யூப், மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் ராமன், கவிஞர் ஷாகுல் ஹமீது, யுஏஇ தமிழ்ச் சங்க தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். தமிழ்த்தேர் மாதாந்திர கவிதை இதழை முனைவர் அய்யூப் வெளியிட முதல் இதழை அக்பர் அலி பெற்றுக் கொண்டார்.
முனைவர் அய்யூப் அவர்கள் தனது உரையில் பலரது பேச்சுக்களை பல்வேறு நிகழ்வுகளில் கேட்டதன் காரணமாக ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக பல்வேறு நலப்பணிகளை மேற்கொள்ள காரணமாக இருந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் ராமன் தனது உரையில் எவர் ஒருவர் ஓய்வு நேரத்தை மிகவும் பயனுள்ளதாக செலவழிக்கின்றாரோ அவர் வாழ்வில் உயர்நிலையினை அடைய முடியும் என்றார். வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களையும் செயல்படுத்துவதன் காரணமாக உயர்வு பெறலாம். நாம் யோசனை செய்வதால் களைப்படையப் போவதில்லை. நல்ல சிந்தனைகள் நம்மை வாழ்வில் உயர்த்தும். பாராட்டுவதன் மூலம் மகிழ்வு அடையலாம். வாழ்வு மகிழ்வானதாய் இருக்கும் என்றார்.
அன்புடன் அல்லாவுக்கு எனும் கவிதை நூலாசிரியர் ஷாகுல் ஹமீது பாரதி, பாரதிதாசன், அவ்வையார், நாமக்கல் கவிஞர், கண்ணதாசன், கவிக்கோ அப்துல் ரஹ்மான், வைரமுத்து உள்ளிட்ட பலரது கவிதைகள் மற்றும் தத்துவங்களை திறனாய்வு செய்து பேசினார்.
பணம் மற்றும் உழவு எனும் தலைப்பில் கவிஞர்கள் கவிதை வாசித்தனர். தமிழ் ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.
அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கவிஞர்கள் பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin