வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

இன்று இடைக்கால ரயில்வே பட்ஜெட்




டெல்லி: ரயில்வே இடைக்கால பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இது தேர்தல் காலம் என்பதால் ஏராளமான சலுகைகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உலகையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் நிலையிலும், ரயில்வே துறையின் மொத்த வருமானம் இந்த நிதியாண்டின் முதல் பத்து மாதங்களில் 13.7 சதவீத உயர்வைக் கண்டுள்ளது. ரயில்வேயின் வருமானம் இந்த காலகட்டத்தில் ரூ. 64 ஆயிரத்து 876.34 கோடியாகும்

சரக்கு வருவாய் ரூ. 38,734.12 கோடியிலிருந்து ரூ. 44,016.26 கோடியாக எகிறியுள்ளது. இது 13.64 சதவீதம் அதிகமாகும்.

பயணிகள் வருவாய் ரூ. 16,134.94 கோடியிலிருந்து ரூ. 18,042.82 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 11.82 சதவீதம் அதிகுமாம்.

சமீபத்தில் இருமுறை எரிபொருள் விலை குறைக்கப்பட்டது. வருவாயும் உயர்ந்துள்ளது. எனவே இந்த இடைக்கால ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணத்தில் பல குறைப்புகள் இருக்கலாம், சலுகைகள் நிறைய அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin