வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

தூத்துக்குடிக்கு-நாகர்கோவில் சிறப்பு ரயில்கள்

எழும்பூரில் இருந்து...

எழும்பூரில் இருந்து ஏப்ரல் 2, 9, 16, 23, 30, மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (எண்: 0601) எழும்பூரில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 3, 10, 17, 24, மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26 ஆகிய நாட்களில் எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் (எண்: 0602) நாகர்கோவிலில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

சென்ட்ரலில் இருந்து....

அதே போல், சென்னை சென்ட்ரலில் இருந்து தூத்துக்குடிக்கு ஏப்ரல் 15, 22, 29, மே 6, 13, 20, 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் (எண்: 0611) சென்ட்ரலில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

மறுமார்க்கத்தில், தூத்துக்குடியில் இருந்து சென்ட்ரலுக்கு ஏப்ரல் 16 23, 30, மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (எண்: 0612) தூத்துக்குடியில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்ட்ரலை வந்தடையும்.

இந்த வாராந்திர சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin