ரயில்வே இடைக்கால பட்ஜெட்டில் விரைவு ரயில் பயணிகள் கட்டணத்தை 2 சதவீதமும் குளிர் சாதன வசதியுடன் கூடிய பயணக் கட்டணங்கள் 2 சதவீதமும் குறைக்கப்படுவதாக, ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் அறிவித்தார்
நாடாளுமன்றத்தில் 2009- 10ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்று தாக்கல் செய்தார்
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய அறிவிப்புகளின் விவரம் வருமாறு:
இந்திய ரயில்வேயின் சரக்கு கையாளும் திறன் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 78 சதவீதம் அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளில் சரக்கு போக்குவரத்து 3 சதவீதத்தில் 8 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டில் பயணிகள் போக்குவரத்து 14 சதவீதமும், சரக்குப் போக்குவரத்து 19 சதவீதமும் அதிகரித்துள்ளது
விரைவு ரயில் (மெயில்) கட்டணங்கள் 2 சதவீதம் குறைக்கப்படுகிறது. அனைத்து குளிர் வசதியுடன் கூடிய பயணக் கட்டணங்கள் (அனைத்து வகுப்புகளுக்கும்) 2 சதவீதம் குறைக்கப்படுகிறது
சரக்குக் கட்டணத்தில் மாற்றம் இல்லை, தற்போதைய கட்டணமே தொடரும்
ரயில்வேயின் நிகர லாபம் இந்த நிதியாண்டில் ரூ.19,000 கோடியைத் தாண்டும். பயணிகள் மீது எந்தக் கட்டணச் சுமையும் ஏற்றாமலேயே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது
நாடு முழுவதும் வரும் நிதியாண்டில் 43 புதிய இரயில்கள் விடப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக