வியாழன், 12 பிப்ரவரி, 2009

திருச்சி-மலேசியா ஏர் இந்தியா நேரடி விமானம்!

திருச்சி: திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு நேரடியாக புதிய விமான சேவையை துவக்கப்போவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

ஏர் இந்தியா விமான சேவையின் மானேஜர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
கடந்த 2005, ஏப்ரல் 29ம் தேதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையை துவக்கியது.

சென்னை, திருச்சி, டெல்லி, மும்பை, திருவனந்தபுரம், ஹைதராபாத், போன்ற 16 பெரிய நகரங்களில் இருந்து 14 வெளிநாட்டு நகரங்களுக்கு வாரம் தோறும் 176 விமான சேவைகளை வழங்கி வருகிறது.

திருச்சி வழியாக சிங்கப்பூருக்கு வாரத்திற்கு 10 முறையும், துபாய்க்கு 3 நாளும், விமானம் இயக்கப்பட்டு வருகிறது.தற்போது திருச்சியில் இருந்து மலேசியா தலைநகர் கோலாம்பூருக்கு நேரடி விமான சேவை துவக்க இருக்கிறோம்.கோலாம்பூருக்கு முதலில் வாரத்துக்கு 3 முறை விமானம் இயக்கப்படும். பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin