வியாழன், 13 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள வெளிநபர்கள் வெளியேற ஆட்சியர் உத்தரவு

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தங்கியிருந்து தேர்தல் பணியாற்றும் பிற தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் இம்மாதம் 16-ம் தேதி மாலை 5 மணிக்குமேல் இருக்கக் கூடாது என ஆட்சியர் கோ. பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இம்மாதம் 18-ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கு பிரசாரம் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 16-ம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.

எனவே, ஆகஸ்ட் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு பிறகு எந்தவொரு அரசியல் கட்சியினரோ, தனி நபர்களோ எவ்வகையிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் கண்டிப்பாக தெரிவித்துள்ளது.

எனவே, அன்று மாலை 5 மணிக்கு பிறகு யாரும் எவ்வகை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கிடையாது.

இதை மீறி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டால், சட்ட விதிகளின்படி அத்தகையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியை சாராதவர்கள் திருமண மண்டபங்களில் குழுக்களாக தங்கியிருத்தல், வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தல், தேர்தல் பிரசாரம் செய்தல் ஆகிய செயல்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

அவ்வாறு வேறு தொகுதிகளில் இருந்து தேர்தல் பிரசாரம் செய்ய ஸ்ரீவைகுண்டம் தொகுதி வந்து தங்கியிருப்பவர்கள் இம்மாதம் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு முன்னதாக வெளியேறிவிட வேண்டும் என்றார் ஆட்சியர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin