வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

செஸ்: சலீம், கத்ரினா முன்னிலை

கோவையில் நடந்துவரும் மாநில அளவிலான 13 வயதுக்கு உள்பட்டோர் செஸ் போட்டியின் சிறுவர் பிரிவில் சென்னை ஒசாமா சலீம், சிறுமியர் பிரிவில் சென்னை மைக்கேல் கத்ரினா ஆகியோர் 6-வது சுற்றின் முடிவில் தனி முன்னிலை பெற்றுள்ளனர்.

கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடந்து வரும் செஸ் போட்டியில் சிறுவர் பிரிவின் 6-வது சுற்று ஆட்டம் புதன்கிழமை நடந்தது.

சென்னை வீரர் ஒசாமா சலீம், கன்னியாகுமரி வீரர் யஷ்வந்த் தேவ்குமாரை வென்று 6 புள்ளிகளுடன் தனி முன்னிலை பெற்றார்.

காஞ்சிபுரம் வீரர் கே.அன்சுமன், சென்னை வீரர் முகில் ஜெயவேலிடம் தோல்வியடைந்தார். முகில் ஜெயவேல் 5.5 புள்ளிகள் பெற்றுள்ளார்.

தி.நகர் வீரர் ஆர்.ஷியாம் சுந்தர், சென்னை வீரர் ஜி.ஆகாஷிடம் தோல்வியடைந்தார். ஆகாஷ் 4.5 புள்ளிகள் பெற்றுள்ளார்.
சென்னை வீரர் எஸ்.கெüசிக், காஞ்சிபுரம் வீரர் எம்.ஆதித்யாவை தோற்கடித்தார்.

சென்னை வீரர் எம்.சித்தார்த், கோவை வீரர் ராகேஷ் கன்னா ஆகியோரின் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
சிறுமியர் பிரிவு: சென்னையின் மைக்கேல் கத்ரினா, கோவை என்.அக்ஷயாவை தோற்கடித்து 6 புள்ளிகளுடன் தனி முன்னிலை பெற்றுள்ளார்.

சென்னை ஜி.சுஷ்மிதா, மதுரை செ.மீனுப்பிரியாவிடம் தோல்வியடைந்தார். கோவையின் சி.கே.வர்ஷா, சென்னை எம்.ஓவியநிலாவிடம் தோல்வியடைந்தார். அனுராதா கணேஷ், உமா பாரதி ஆகியோருக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin