வியாழன், 13 ஆகஸ்ட், 2009

ஹஜ் பயணிகளுக்கு பாஸ்போர்ட் அவசியம்-விண்ணப்ப தேதி நீட்டிப்பு

மதுரை : ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகளுக்கு பாஸ்போர்ட் கட்டாயம் தேவை என சவுதி அரசு புதிய உத்தரவு போட்டுள்ளது. இதனால் இதுவரை பாஸ்போர்ட் பெறாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உரிய பயண ஆவணங்கள் இருப்பவர்களை மட்டுமே ஹஜ் பயணத்திற்கு அனுமதிக்க முடியும் என்று சவுதி அரேபிய அரசு கூறியுள்ளது. இதுவரை ஹஜ் பயணிகள் சிறப்பு பயண அனுமதி பெற்று சவுதி அரேபியாவிற்கு சென்று வந்தனர்.

ஆனால், தற்போது பாஸ்போர்ட் உடன், வைரஸ் காய்ச்சல் தடுப்பு குறித்த சான்றிதழும் அவசியம் என்று அந்த நாட்டு அரசு கோரியுள்ளது.

பல்வேறு மாநில ஹஜ் கமிட்டிகளால் ஹஜ் பயணம் மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேரில் 20 ஆயிரம் பேர் மட்டுமே பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான சிறப்பு பாஸ்போர்ட் பெறுவதற்கான தேதி ஜூலை 31 ம் தேதியுடன் முடிவடைந்து விட்டபோதிலும், இதுவரை பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்காதவர்கள், உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

அவர்களுக்கு உடனே பாஸ்போர்ட் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய அரசின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin