வியாழன், 2 ஏப்ரல், 2009

குண்டு வைப்போம் !


கவிதை

ரத்தம் .... எங்கும் ரத்தம் பூக்களில் ரத்தம்

தேசியப் பாடல்களில் ரத்தம்

வைகறைக் கிரணங்கள் ரத்தம்

வெள்ளைப் புறாக்களின்அலகுகளில் ரத்தம்

புண்ணிய தீர்த்தங்களில்ரத்தம்

வேதப் புத்தகங்களில் ரத்தம்

தாய்ப் பாலில் ரத்தம்.

ரத்தவெள்ளத்தில் கோயில்களும் பள்ளிவாயில்களும்'சர்ச்'சுக்களும் மூழ்கிவிட்டன !

எல்லாத் தெய்வங்களுக்கும் ரத்தாபிஷேகம் நடக்கிறது.ஏனிந்த ரத்தப் பாசனம் ?

இதில் எந்தப் பயிர் விளையும் ?

சிவப்பு மையால் பிழை திருத்தலாம் சிவப்பு ரத்தத்தால் திருத்த நினைப்பது பிழையல்லவா ?

மனித தேகம் இறைவனின் நடமாடும் ஆலயம்-உயிராலயம் அதை இடிப்பவன் எப்படி மதவாதியாவான் ?

'மிருகம்மனிதனாயிற்று' என்றார் டார்வின் !

பல மிருகங்கள்இன்னும் மனிதராகவில்லை !

மதங்கள் ரத்தக் காட்டேரிகளைத்தான் பெற்றெடுக்கும் என்றால் அந்த 'மதங்' களுக்குக் குண்டு வைப்போம் !

நன்றி. - 'கவிக்கோ' அப்துல்ரகுமான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin