செவ்வாய், 7 ஏப்ரல், 2009

முப்தி முகம்மதின் மருமகன் தேமுதிக வேட்பாளர்


ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் முப்தி முகம்மது சயீத்தின் மருமகன் செளகத் ஷெரீப் வேலூர் தேமுதிக வேட்பாளராக களம் இறங்குகிறார்.
43 வயதாகும் செளகத் ஷெரீப், சென்னை நீலாங்கரையில் வசித்து வருகிறார். இவர் தேமுதிகவின் டெல்லி மாநில இளைஞர் அணிச் செயலாளராக இருக்கிறார்.

தொழிலதிபரான ஷெரீப், தேமுதிகவின் விஐபி வேட்பாளர் ஆவார். இவர் முப்தி முகம்மது சயீத்தின் மருமகன் ஆவார். சயீத்தின் 3வது மகள் ருபையாவைத்தான் ஷெரீப் கல்யாணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேமுதிகவிலேயே விஜயகாந்த்துக்கு அடுத்து பிரபல வேட்பாளராக ஷெரீப் உருவெடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin