வியாழன், 2 ஏப்ரல், 2009

மனிதநேய மக்கள் கட்சி அங்கீகாரம் வழங்கியது தேர்தல் ஆணையம்

தமிழக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் மனித நேய மக்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.

டெல்லியில் தேர்தல் ஆணையத்தின் முன்பு பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் மற்றும் கே. அப்துல் சலாம் (தென் சென்னை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர்) ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் நேர்காணலில் கலந்து கொண்டனர்.

அதன்பிறகு கடந்த 27.03.09 அன்று மனிதநேய மக்கள் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்து அறிவித்திருக்கிறது.

நன்றி : தமுமுக இணையத்தளம்

குறிப்பு :

மிக சமீபத்தில் ஆரம்பித்த “மனித நேய மக்கள் கட்சி” அதி விரைவாக செயல்பட்டு தேர்தல் கமிசனில் பதிவு செய்து முறைப்படி அங்கீகரமான கட்சியாக ஆகியுள்ளது. வாழ்த்துக்கள்!! “முஸ்லிம்களின் முதல் அரசியல் கட்சி” என்று தன்னை அறிவித்து கொண்ட “இந்திய தேசிய மக்கள் கட்சி” இது வரை தேர்தல் கமிசன் உட்பட எதிலும் பதிவாகவில்லை என்பதும், பதிவு செய்து அங்கீகரம் பெற்றதாக தவறான தகவலை மக்களுக்கு மத்தியில் பரப்பியதும் மிக வேதனையான செயலாகும்!! இதனை இதன் தலைவர்கள் உணர வேண்டும்!!

தகவலுக்கு நன்றி : மண்ணடி காக்கா ஆதம் ஆரிபின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin