இ&காமர்சில் ரயில்வே சாதனை ! ரூ.3,400 கோடிக்கு இணையதளம் மூலம் டிக்கெட் விற்பனை !
ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.3,400 கோடிக்கு இணையதளம் மூலம் டிக்கெட் விற்பனை செய்து சாதனை செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஐ.ஆர்.சி.டி.சி.யின் டிக்கெட் விற்பனை அதிகரித்து வருகிறது. 2008&09ல் இணையதளம் மூலம் 3.87 கோடி டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டன. முந்தைய ஆண்டை காட்டிலும் இது 104 சதவீதம் அதிகம். 2008&09ம் ஆண்டில் விற்கப்பட்ட டிக்கெட்களின் மொத்த மதிப்பு ரூ.3,400 கோடி. இதன் மூலம் இந்தியாவில் இணையதள வர்த்தகத்தில் (இ&காமர்ஸ்) ரயில் வே பெரும் பங்கு வகிக்கிறது.
ஏனெனில், கடந்த ஆண்டில் இணையதளம் மூலம் நடந்த மொத்த வர்த்தகத்தின் அளவு ரூ.9,000 கோடி. இதில் ரயில்வே மட்டுமே 3ல் ஒரு பங்கு வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் 79 லட்சம் பேர் இணையதளம் வர்த்தகங்களை மேற்கொள்கின்றனர். இதில் 80 சதவீதம் பேர் பயண டிக்கெட்களை வாங்குபவர்கள். ரயில்வே டிக்கெட் விற்பனையை செய்யும் தனியார் நிறுவனங் களின் வளர்ச்சியும் பெருமளவு அதிகரித்துள்ளது.
அதிகளவில் ரயில்வே டிக்கெட் விற்பனை செய்யும் கிளியர்டிரிப், கடந்த ஆண்டை காட்டிலும் 100 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த இணையதளம் மூலம் நாளன்றுக்கு 3,000 டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த ஒரு மாதத்துக்கு முன் ரயில்வே டிக்கெட்களை இணையதளம் மூலம் விற்பனை செய்ய ஆரம்பித்த யாத்ரா நிறுவனம், ஆரம்பத்தில் நாளன்றுக்கு 8 முதல் 10 டிக்கெட்கள் விற்பனை செய்தது. இப்போது 1,000 டிக்கெட்கள் விற்பனை செய்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக