ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

செருப்பு தைக்கும் தொழிலாளி: “நானோ” காருக்கு முன்பதிவு; ஒரே செக்கில் ரூ.1.40 லட்சம் செலுத்தினார்

டாடா நிறுவனம் தயாரித்துள்ள “நானோ கார், ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நாடு முழுவதும் கடந்த 9-ந்தேதி தொடங்கியது.

குலுக்கல் முறையில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் கட்டமாக நானோ கார்கள் வழங்கப்பட உள்ளது. மோட்டார் சைக்கிள் விலையில் கிடைப்பதால், இந்த காரை வாங்க போட்டி போட்டு முன்பதிவு செய்கிறார்கள்.

மும்பையில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் “நானோ” காருக்கு முன்பதிவு செய்துள்ளார். அவருடைய பெயர் மாருதி பண்டாரே (வயது 42). ஒருஅறை கொண்ட சிறிய வீட்டில் வாழும் இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவரது மாத வருமானம் ரூ.7 ஆயிரம்.

மும்பையில் உள்ள ஒரு “ஷோ” ரூமில் இவர் மாருதி காருக்கு முன்பதிவு செய்தார். “நானோ” காரில் பல்வேறு வசதிகளை கொண்ட உயர்ரக கார் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. இந்த காருக்கு பண்டாரே முன்பதிவு செய்திருக்கிறார். இந்த காரை கடன் பெற்றும் வாங்கலாம். ஆனால் இந்த செருப்பு தைக்கும் தொழிலாளி ரொக்கமாக வாங்குவதற்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான “செக்” கொடுத்துள்ளார்.

இது குறித்து மாருதி பண்டாரே கூறியதாவது:-

மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு, நான் 2 வருடங்களாக பணம் சேமித்து வந்தேன். கார் விலையே 1 லட்சம் ரூபாய்தான் என்று கேள்விப்பட்டதால் கார் வாங்க முடிவு செய்தேன்.

கடன் பெற்று கார் வாங்க விரும்பவில்லை. எனவே, முழு தொகையையும் கட்டி கார் வாங்க விரும்புகிறேன். அதற்காகவே ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தையும் “செக்” போட்டு கொடுத்து விட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin