மக்கா மெட்ரோ ரெயிலின் முதல் கட்ட பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இவ்வருட ஹஜ்ஜுக்கு முன்னதாக மக்கா மெட்ரோ ரெயிலை இயக்க சவூதி ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
மக்கா மெட்ரோ ரயில் திட்டம் மக்கா, மினா, முஜ்தலிபா, அரபாத் ஆகிய புனிதப்பகுதிகளை இணைப்பதாகும். இத்திட்டத்தின் முதல் கட்டம் 35 சதவீத பணிகளை நிறைவு செய்துள்ளது. எனவே இவ்வாண்டு ஹஜ்ஜில் மினா,முஜ்தலிபா,அரபாத் ஆகிய இடங்களுக்கு ரயிலிலேயே சென்று வரலாம்.
திட்டத்தின் இறுதியில் இவ்வழித்தடம் மக்காவையும் உள்ளடக்கியதாக இருக்கும்.தற்போது அரபாத்தில் மூன்று நிறுத்தங்களும், முஜ்தலிபா மற்றும் மினாவுக்கிடையில் மேலும் மூன்று நிறுத்தங்களும் அமைக்கப்பட்டுள்ளன.மக்கள் நெரிசல் மிகுந்த இப்பகுதிகளில்;தான் கடும் போக்குவரத்து நெறுக்கடியும் விபத்துகளும் நிகழ்ந்து வந்தன. ஹஜ் காலங்களில் ஏறக்குறைய 50,000 வாகனங்களில் மக்கள் இப்பகுதிகளுக்கு சென்று வந்தனர்.தற்போதைய வசதியைக் கொண்டு மணிக்கு 60,000 லிருந்து 80,000 வரையிலான யாத்ரிகர்களுக்கு போக்குவரத்து வசதியை அளிக்க முடியும்.
இந்த ரயில் 23 மீட்டர் நீளமும் 3 மீட்டர் அகலமும் கொண்ட 12 பெட்டிகளை கொண்டது.எதிர் வரும் வருடங்களில் மக்கா மெட்ரோ(Makkah Metro) ரயில் திட்டம் மக்காவையும் மதினாவையும் இணைக்கும் ஹரமைன் ரயில்வே(Haramine Railway) மற்றும் அரபு நாடுகளை இணைக்கும் வளைகுடா ரெயில்வேயுடனும்(Gulf Railway) இணைக்கப்படும்.
இனி வயதானவர்களும் முடியாதவர்களும் ஹஜ்ஜின் நெறுக்கடியைப் பற்றிய அச்சமின்றி நிம்மதியாக மக்காவை நோக்கி புறப்படலாம். (இன்ஷா அல்லாஹ்)
நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக