வெள்ளி, 11 ஜூன், 2010

ஸ்ரீவை., தாலுகாவில் 3 மாதத்தில் பட்டாமாறுதல் செய்யாமல் 2092 மனுக்கள்

ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் மூன்றே மாதத்தில் இரண்டாயிரத்து 92 மனுக்கள் பட்டாமாறுதல் செய்யாமல் உள்ளது என தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் தெரிவித்துள்ளனர்.

கிடப்பில் போட்ட மனுக்களை உடனே பரிசீலனை செய்து பட்டா மாறுதல் செய்து வழங்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட கிராம வாழ் மக்கள் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 2005ம் ஆண்டு தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும் பட்டாமாறுதல் சம்பந்தமாக வந்த மனுக்கள், பரிசீலனை செய்த மனுக்கள், பரிகாரம் தேடிய மனுக்கள் எவ்வளவு, நிலுவையில் உள்ள மனுக்கள் எவ்வளவு என பொது தகவல் அலுவலரிடம் கிராம வாழ் மக்கள் நல சங்க மாவட்ட அமைப்பாளர் நயினார் குலசேகரன் கேட்டுள்ளார்.

இதன்படி 2009ம் ஆண்டு நவம்பர், டிசம்பர், அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் இருப்புமனுக்கள் 2546 என்றும், நடப்பு மாதம் வந்த மனுக்கள் 569 என்றும் ஆக மொத்தம் 3115 மனுக்கள் என்றும், அதில் முடிவு செய்யப்பட்ட மனுக்கள் 1023 மனுக்கள் என்றும், நிலுவையில் உள்ள மனுக்கள் 2092 என்றும் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதத்தில் 2092 மனுக்கள் கிடப்பில், நிலுவையில் உள்ளதால் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிய 2092 மனுக்கள் பட்டா மாறுதல் செய்யாமல் உள்ளது. நிலுவையில் உள்ள 2092 மனுக்களை உடன் பரிசீலனை செய்து பட்டா மாறுதல் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

செய்தி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin