வியாழன், 21 ஜனவரி, 2010

ஸ்ரீவைகுண்டத்தில் திமுக.,கொடியேற்று விழா

ஸ்ரீவைகுண்டத்தில் திமுக.,சார்பில் கொடியேற்று விழா நடந்தது. தமிழர் திருநாள், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்.,18 வார்டுகளிலும் திமுக.,நகர கழகம் சார்பில் கொடியேற்று விழா நடந்தது. விழாவிற்கு நகர செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார்.

நகர அவைத் தலைவர் துரைசிங்கம், துணை செயலாளர் இசக்கியப்பன், மாவட்ட பிரதிநிதி முத்தையா, மைனர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கவுன்சிலர்கள் இசக்கிபாண்டி, பொன்பாண்டி, பராசக்தி, வார்டு செயலாளர்கள் சண்முகசுந்தரம், ஜெயபால், முத்துராஜ், குமார், மகராஜன், முத்து, பலவேசம், ரவி, அறங்காவலர்குழு உறுப்பினர் முருகேசன், முன்னாள் நகர பொருளாளர் செல்லையா மற்றும் வார்டு செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin