புதன், 27 ஜனவரி, 2010

ஸ்ரீவை.,கேஜிஎஸ் பள்ளியில் ஐம்பெரும் விழா :இதயநோய் நிபுணர் பங்கேற்பு

ஸ்ரீவைகுண்டம் கேஜிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் ஐம்பெரும் விழா நடந்தது.குடியரசு தினவிழாவை முன்னிட்டு பள்ளியின் 130வது ஆண்டு தொடக்கவிழா, பள்ளி முதல் தலைமையாசிரியர் ஸ்ரீனிவாசஅய்யங்கார் நினைவு தினவிழா, பள்ளி இணையதள தொடக்கவிழா, பள்ளி ஆண்டு விளையாட்டு விழா ஆகிய ஐம்பெரும் விழா நடந்தது.

விழாவிற்கு பள்ளி ஆட்சிகுழு தலைவர் ராமாணுஜம் தலைமைவகித்தார். கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். துபாய் ராய் நிறுவன துணைத் தலைவர் அருள்தாசன் பள்ளி இணைய தளத்தை தொடங்கி வைத்தார்.விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை மீனாட்சிமிசன் இதய நோய் நிபுணர் டாக்டர் ரகுராம் கொடி ஏற்றி, மரியாதை ஏற்று விழாவில் பேசியதாவது;

இன்று இந்திய தாய்திருநாடு பலதுறைகளில் முன்னேறி உள்ளது. இன்று நாம் 66 சதவீதம் எழுத்தறிவு பெற்றவர்களாகி விட்டோம். அப்போது 200 நியூஸ் பேப்பர்கள் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது 2000 செய்திதாள்கள் இந்தியாவில் வெளியேறுகிறது.இன்று இந்தியாவை கண்டு அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் பயப்படுகிறது. இந்தியாவின் வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது. ஆனால் 66 சதவீதம் கல்வி அறிவு பெற்ற நம்மில் மீதம் 34 சதவீதம் பேர் கல்வி அறிவு பெறாதது வருத்தம்தான். இன்னும் 65 சதவீதம் மக்கள் சுத்தமான குடிநீர் பெறுவது கிடையாது.

அடிப்படை தேவைகள் என்று கூறக்கூடிய படிப்பறிவு, மின்சாரம், சுகாதாரமான குடிநீர் போன்றவை நமது முழு தேவைகளை கொடுக்கும் அளவில் இல்லை. எனவே இந்தியாவின் முன்னேற்றம் சமநிலையில் இல்லை. உலகிலேயே பணக்காரர்கள், அறிவாளிகள் அதிகம் வாழக்கூடிய நாடு இந்தியாதான். அதேபோல் தரித்திரர்கள். லஞ்சம், கரப்சன் செய்பவர்கள் அதிகம் வாழக்கூடிய நாடும் இந்தியாதான் என்பதால் வெட்கப்பட வேண்டிய நிலை உள்ளது.

எல்லோரும் நூறு சதவீதம் மதிப்பெண்கள் வாங்க முடியாது எல்லோரும் டாக்டர், இன்ஜி.,என்றும் ஆக முடியாது. அதற்காக முயற்சி செய்ய வேண்டும். அது கிடைக்க வில்லை 40 மார்க்குகள்தான் எடுத்தோம் என்றால் அதற்காக வருத்தப்படவும் கூடாது. அதிக மதிப்பெண்கள் எடுத்தால் அறிவாளியும் இல்லை, குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் அவர் முட்டாளும் அல்ல. அறிவின் அளவுகோல் மார்க் அல்ல குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் மாணவர்கள் மனம் உடைந்து விடக்கூடாது.

உலகம் மிகப்பெரியது. பல்வேறு துறைகள் உள்ளது. அவைகள் உங்களுக்காக கதவுகளை திறந்து வைத்துள்ளது. எந்த தொழிலும் அநாகரிகம் கிடையாது. ஏனென்றால் மனிதரில் வேற்றுமை ஏதும் கிடையாது. மொழி மீது பற்று வேண்டுமே தவிர வெறி கூடாது. மனிதன் வாழ்வதற்கும், பிறறை வாழ்விப்பதற்கும் தான் பிறந்தானே தவிர நம்மை ஜாதி, மதம், மொழி என அழித்து கொள்வதற்காக அல்ல என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். இதுவே தான் நாம் கல்வி பெருவதின் நோக்கம் ஆகும். மனிதன் சாதிக்க பிறந்தவன். சாதிப்பதற்குள் மறைந்து விடக்கூடாது.

எல்லோரும் முதல்நிலை அடையமுடியாது. ஆனால் முயற்சிக்க வேண்டும். நான் டாக்டராக ஆவதற்கு இந்த பள்ளியில் உள்ள ஆசிரியர் தான் காரணம். ஆசிரியர்கள் தந்த விளக்கம் என்னை இந்த நிலையில் கொண்டுவிட்டுள்ளது என்று பேசினார்.விழாவில் தலைமையாசிரியர் நல்லமுத்து வரவேற்றார்.


விழாவை சடகோபன், பள்ளி, கல்வி அபிவிருத்தி சங்க செயலர் சிவசுப்பிரமணியன், பள்ளி செயலர் சண்முகநாதன், ஆட்சிகுழு உறுப்பினர்கள் ராமசாமி, வைகுண்டபெருமாள், முகமது அப்துல் காதர், ஆழ்வை டவுன் பஞ்.,தலைவர் ஆதிநாதன், ஸ்ரீவை.,டவுன் பஞ்.,தலைவர் கந்தசிவசுப்பு, டிவிஎஸ்.ஆலோசகர் முருகன், ஸ்தலத்தார் வெங்கிடாச்சாரி, இன்ஜி.,பூபதிராம்குமார், முன்னாள் ஆசிரியர்கள் ஸ்ரீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

செய்தி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin