ஸ்ரீவைகுண்டம் மாவட்ட துணைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 கைதிகள் குடியரசு தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
ஸ்ரீவைகுண்டம் மாவட்ட துணை சிறைச்சாலையில் சிறைவாசிகளுக்கான மக்கள் நீதிமன்ற தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆவடி தியாகராஜமூர்த்தி தலைமை வகித்தார். கூடுதல் நீதிபதி மேரி அன்சலாம், துணை நீதிபதி பரமராஜ், குற்றவியல் நீதிபதி செல்வம், வழக்கறிஞர் சங்கத் தலைவர் துரைராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், குற்றவழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செல்வின் (27),மயில்ராஜ் (27), புருஷோத்தமன் (23) உள்ளிட்ட 3 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
முன்னதாக மாவட்ட உரிமையியல் நீதிபத் சந்தோஷ் வரவேற்றார். முடிவில் வழக்கறிஞர் சங்கச் செயலர் பெருமாள் பிரபு நன்றி கூறினார்
செய்தி: தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக