ஸ்ரீவைகுண்டத்தில் மருதூர் அணைக்கட்டு நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்கள் பதவி ஏற்றனர்.மருதூர் அணைக்கட்டுக்கு கீழ் உள்ள பாசன கால்வாய்களான மருதூர் அணைக்கட்டு மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு வடகால், தென்கால் ஆகிய பாசன கால்வாய்களுக்கான பகிர்மானக்குழு தலைவர் தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் 24ந் தேதி நடந்து முடிந்தது.
இந்த தேர்தலில் மருதூர் அணைக்கட்டு மேலக்கால் தலைவராக அலங்காரம், கீழக்கால் தலைவராக சீனிப்பாண்டியன், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு வடகால் தலைவராக உதயசூரியன், தென்கால் தலைவராக ராஜபாண்டியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்ட்டனர்.
இவர்களுக்கான பதவி ஏற்பு நிகழ்ச்சி ஸ்ரீவைகுண்டம் பொதுப்பணித்துறை ஆபிஸில் நடந்தது. திருநெல்வேலி பொதுப்பணித்துறை இன்ஜினியர் நாகராஜன் தலைமை வகித்தார். உதவி இன்ஜினியர் நிர்மல் கிருஷ்தாஸ், பிரிவு அலுவலர்கள் ரகுநாதன், வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பொதுப்பணித்துறை இன்ஜினியர் நாகராஜன் பதவிபிரமாணம் செய்து வைத்தார்.
செய்தி: தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக