துபாய் தமிழ்ச் சங்கம் அமீரகத்தின் 38வது தேசிய தினம், வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மானுக்கு பாராட்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகளை நாளை (டிசம்பர் 2ம் தேதி) இந்திய உயர்நிலைப்பள்ளி ஷேக் ராஷித் அரங்கில் நடத்துகிறது.
இந்த விழாவில் இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி, ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும நிர்வாக இயக்குனர் செய்யது எம். ஸலாஹுத்தீன், இந்திய கம்யூனிட்டி வெல்ஃபேர் கமிட்டியின் கன்வீனர் கே. குமார் உள்ளிட்டோர் கௌரவப்படுத்தப்பட உள்ளனர்.
மேலும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மானுக்கு பாராட்டு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
விழாவில் கலைப்புலி தாணு சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். சன்டிவி கல்யாணமாலை புகழ் வாசுகி மனோகரன் குழுவினரின் பட்டிமன்றம், இசையமைப்பாளர் கங்கை அமரன் தலைமையில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
துபாய் தமிழ்ச் சங்க குழந்தைகளின் நடன நிகழ்ச்சியும் இடம்பெற இருக்கிறது.
அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அரங்கினுள் அனுமதிக்கப்படுவர்.
அனுமதிச் சீட்டுகளை பெற துபாய் தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் சி. ஜெகநாதன் 050 5787657/
விழாக்குழு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா 050 467 4399 / 050 51 96 433 மற்றும் dubaitamilsangam@gmail.com ஆகிய எண்களையும் இணையத்தளத்தையும் தொடர்பு கொள்ளலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக