ஸ்ரீவைகுண்டம் அருகே தாயை மிரட்டுவதற்காக வெடிகுண்டு வீசிய வழக்கில் ரெடிக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி முதலாவது விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
வெள்ளூர் நடுத்தெருவை சேர்ந்த கணபதி மனைவி சுப்புலெட்சுமி (60). இவரது மகன் கந்தன் (40).
தனது பெயருக்கு வீட்டை எழுதித் தருமாறு தாய் சுப்புலெட்சுமியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். அதே போன்று 2.8.2007 அன்று, தனது தாயை மிரட்டுவதற்காக நாட்டு வெடிகுண்டை வீட்டின் முன்பு வீசியுள்ளார். இது தொடர்பாக சுப்புலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கந்தனை ஸ்ரீவைகுண்டம் போலீஸôர் கைது செய்தனர். வழக்கு விசாரணை தூத்துக்குடி முதலாவது விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை நீதிபதி (பொறுப்பு) எம். சேகர் விசாரித்து, எதிரி கந்தனுக்கு வெடிகுண்டு வீசிய குற்றத்திற்காக 25 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், தாயை கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 7 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதமும், அவதூறாக திட்டிய குற்றத்திற்கு ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்த தண்டனைகள் அனைத்தையும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி: தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக