கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில தலைவர் கே.எம். காதர் முகைதீன் கோரிக்கை விடுத்துள்ளார்
நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணைய அறிக்கையைத் தாக்கல் செய்யவும், அவரது பரிந்துரைப்படி கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கவும் சட்டமியற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளதற்கு முதல்வர் கருணாநிதியே காரணம்.
தஞ்சை மாவட்டம் வளுத்தூரில் இம் மாதம் 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை முஸ்லிம் இளைஞர்களுக்கு மத நல்லிணக்கம், தீவிரவாத ஒழிப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. பெங்களூரில் ஜனவரி 15,16-ல் எங்கள் கட்சியின் தேசிய மாநாடு நடைபெற உள்ளது என்றார் காதர் முகைதீன்.
பேட்டியின்போது, மாநில அமைப்புச் செயலர் அப்துல் மஜீத், மாவட்டத் தலைவர் துராப்ஷா, செயலர் எல்.கே.எஸ். மீரான் மைதீன், ஷிபா எம்.கே. முகம்மது ஷாபி ஆகியோர் உடனிருந்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக