'வந்தே மாதரம்' எனத் தொடங்கும் இந்தியாவின் தேசியப் பாடலுக்கு எதிராக ஜமாத் - இ- உலேமா ஹிந்த் என்கிற முஸ்லிம் அமைப்பு ஃபட்வா எனப்படும் மதக்கட்டளையைப் பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம் தேவ்பான்ட் நகரில் நடந்து வரும் இந்த அமைப்பின் தேசிய மாநாநாட்டில் இந்தப் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் பாடலின் சில வரிகள் இஸ்லாம் மதத்துக்கு எதிராக இருப்பதாக அந்த அமைப்பின் தலைவர் கூறியிருப்பதாகத் தெரிகிறது.
வந்தே மாதரம் பாடல் பாடப்படும் பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்ப வேண்டாம் என முஸ்லிம் பெற்றோர்களை அந்த அமைப்பு கேட்டுக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் இன்று உரையாற்றுகிறார். சச்சார் கமிட்டியின் அறிக்கை மற்றும் பொடா சட்டம் தொடர்பான பிரச்னைகள் குறித்து முஸ்லிம் தலைவர்களுடன் அவர் விவாதிப்பார் எனத் தெரிகிறது. ஹிந்தி பட இயக்குனர் மகேஷ் பட்டும் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்.
ஏற்கெனவே கடந்த 2006,ம் ஆண்டில் ஹைதராபாதைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் இதே பாடலுக்கு ஃபட்வா பிறப்பித்திருக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக