துபாய் இந்திய கன்சல் ஜெனரல் ஆதரவுடன் செயல்பட்டு வரும் இந்திய சமூக நல அமைப்பின் இணையத்தள (www.icwcdubai.com) துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இணையத்தளத்தை இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் சசி தரூர் துவக்கி வைத்தார். அவர் தனது உரையில் இந்திய சமூக நல அமைப்பின் பணிகளைப் பாராட்டினார்.
நிகழ்வில் இந்திய தூதர் தல்மிஷ் அஹ்மத், கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி, இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி, மக்கள் தொடர்பு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, துபாய் தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் ஜெகந்நாதன், துபாய் தமிழ் மகளிர் சங்க நிர்வாகிகள், பல்வேறு இந்திய அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக