சனி, 3 அக்டோபர், 2009

மீண்டும் ஒரு தலைவலி


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு அப்போதைய சமஸ்தானங்களை வலுக்கட்டாயமாக இந்தியாவுடன் இணைத்தார். ஆனால் சுதந்திர சுயாட்சிப்பகுதியாக சிறப்பு அந்தஸ்துக்களோடு இருந்த காஷ்மீரை தற்காகிலகாம இந்தியாவுடன் இணைப்பது என்றும். பின்னர் காஷ்மீரிகளிடம் வாக்கெடுப்பு நடத்தி அதற்கேற்ப அதன் சுதந்திரத்தை தீர்மானிப்பது என்றும் வெளிப்படையாக ஒப்பந்தம் போடப்பட்டது. இந்தக் கருத்தை தனது முதல் சுதந்திர தினச் செய்தியில் வானொலியிலும் அறிவித்தார் நேரு ஆனால் கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் ஓடிக்கழிந்த நிலையில் இந்தியா காஷ்மீரை தங்கள் மாநிலம் என்றும் பாகிஸ்தான் காஷ்மீரை தங்களது பகுதி என்றும் சொந்தம் கொண்டாடி வருகிறது.

இந்த இரண்டு அரசுகளுக்கும் இடையில் சிக்கிக் கொண்ட காஷ்மீரிகளோ தங்களுக்கு வழ்ங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் கடந்த முப்பதாண்டுகளாக போராடி வருகிறார்கள். இரு நாட்டு இராணுவ ஆக்ரமிப்புகள் தீவீரவாதக் குழுக்கள் என காஷ்மீர் மக்கள் அன்றாடம் படும் இன்னல்களுக்கு அளவே இல்லை.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் சீனா காஷ்மீரிகளை தனி நாட்டுப்பிரஜைகளாக அங்கீகரித்து விசா வழங்கியுள்ளது.

இந்திய உயர்பீடங்களில் கடும் கொதிப்பை இது உருவாக்கியுள்ள போதிலும் சீனா இதுவரை இது பற்றி கருத்தே சொல்லவில்லை. ஏற்கனவே அருணாச்சலப் பிரதேசத்தவர்கள் சீனா வர விசா வாங்க வேண்டியதில்லை என்றது சீனா. அதாவது அருணாச்சலப் பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என்றது. இந்தியா கடும் எதிர்ப்பைத் தெரிவித்தும் அதற்கு சீனா எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் இமையமலையில் லடாக் பகுதியில் சில பகுதிகளுக்குள் நுழைந்த சீனா இராணுவத்தினர் சிகப்பு மையில் சீனா என்று பிர்மாண்ட எழுத்துக்களை எழுதிச் சென்றனர். லடாக் பகுதிக்குள் நுழைந்த இராணுவக் ஹெலிகாப்டர்கள் அப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு பரிசுப் பொருட்களையும் உணவுப் பொட்டலங்களையும் போட்டது. நீண்ட கால முரணைச் சுமந்திருக்கும் சீனாவும் இந்தியாவும் பரஸ்பரம் முரண்களை இவ்விதமாய் வளர்த்துக் கொண்டிருக்கிறது.
நன்றி :ஜி டி என்

1 கருத்து:

  1. நமது ஸ்ரீவை மக்கள்யில் எவரும் புதியவர்கள் இடுகை செய்யவில்லை என்ற குறை அதை நண்பர் நெல்லை ஹமீது மூலம் நிறைவேற்றி விட்டது அதற்க்கு ரொம்ப நன்றி.

    இதை தொடர்த்து செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன்

    பதிலளிநீக்கு

LinkWithin

Blog Widget by LinkWithin