புதன், 7 அக்டோபர், 2009

‘வெங்காய வெடி’ வெடித்து 4 பேர் பலி

மதுரை: சோழவந்தான் ரெயில் நிலையத்தில் இன்று மாலை வெங்காய வெடி வெடித்தது. இதில் சிக்கி ரெயில் நிலையத்தில் நின்றிருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.



காயமடைந்த 15 பேரில் இருவர் மருத்துவனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர்.

மதுரை-திண்டுக்கல் இடையில் உள்ள சோழவந்தான் நிலையத்தில் அக்டோபர் 6 ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு மயிலாடுதுரையிலிருந்து நெல்லை நோக்கி சென்றுகொண்டிருந்த ரெயில், சோழவந்தான் ரெயில் நிலையத்தில் நின்றது.

அப்போது ரெயில்நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் அறை அருகில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இதில் ரெயில் நிலைய மேற்கூரை முற்றிலும் சேதம் அடைந்தது. குண்டுவெடிப்பு சத்தம் கேட்டு மயிலாடுதுரை-நெல்லை ரெயில் பயணிகள் அலறியடித்துக்கொண்டு ரெயிலை விட்டு இறங்கி ஓடினர். தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் விரைந்துவந்து காயமடைந்தவர்களை மீட்டு மதுரை அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ரெயிவே துறை அதிகாரிகள் சோழவந்தான் ரெயில் நிலையத்துக்கு விரைந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். பலியான 4 பேரின் உடல்களும் மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களின் பலரின் நிலை கவலைக்கிடமான உள்ளதால் பலி எண்ணிக்கை அதிரிக்கும் என அஞ்சப்படுகிறது.

ரயில்கள் நிறுத்தம்…

இந்த விபத்து காரணமாக சென்னையில் இருந்து மதுரைக்கு சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயில் கொடை ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே மதுரைக்கு வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சோழவந்தான் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களும், சென்னை உள்பட வடமாவட்டங்களுக்கு வரும் ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதற்கிடையே ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், தீபாவளிக்கு வாங்கி வந்த வெங்காய வெடி மூட்டைகள் வெடித்ததால்தான் இந்த விபத்து நடந்துள்ளது என்று தெரிய வந்தது.

சோழவந்தான் ரயில் நிலையத்தில் வெடிக்காத நிலையில் இருந்த வெங்காய வெடி மூட்டைகள் பல கைப்பற்றப்பட்டுள்ளன. விசாரணை தொடர்கிறது.

இருவர் கைது

இதற்கிடையே, திண்டுக்கல் தெப்பம்பட்டியில் உள்ள வீட்டில் அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரிப்பு நடந்தது தெரிய வந்தது. பட்டாசை தயாரித்த ஆறுமுகம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பட்டாசு தயாரிப்பில் ஆறுமுகத்துக்கு துணையாக இருந்த குமார் என்பவர் தலைமறைவாகி விட்டார்.

சோழவந்தானை சேர்ந்த ராமர் தெப்பம்பட்டியில் உள்ள ஆறுமுகத்திடம் தீபாவளி விற்பனைக்காக பட்டாசுகள் வாங்கியுள்ளார். பட்டாசுகள் வாங்கி திரும்பிய போது சோழவந்தான் ரயில் நிலையத்தில் பட்டாசுகள் வெடித்துள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin