தென்காசி,நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆகஸ்டு மாதத்துடன் சீசன் முடிந்து விட்டது. கடந்த மாதம் சில நாட்கள் மழை பெய்ததால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் விழுந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக குற்றாலம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மலைப்பகுதியிலும் மழை அதிகரித்ததால் குற்றாலம் அருவிகளில் நேற்று காலையில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஐந்தருவியில் ஐந்து கிளைகளும் ஒன்றானது போல் தண்ணீர் கொட்டுகிறது. மேலும் தண்ணீர் சற்று பழுப்பு நிறத்தில் விழுந்தது. இந்த தண்ணீரில் குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு நேற்று காலை 10 மணி முதல் தடை விதிக்கப்பட்டது.
மெயின் அருவியில் ஓரமாக நின்று சுற்றுலா பயணிகள் குளித்தனர். மாலை 5 மணிக்கு தண்ணீர் மேலும் அதிகரித்ததால் அங்கும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சிற்றருவி, புலியருவி ஆகியவற்றில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளித்து சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக